#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

முதல் பாகத்தை முந்தியதா இந்த Don’t breathe 2 - Don’t breathe 2 திரை விமர்சனம்

முதல் பாகத்தை முந்தியதா இந்த Don’t breathe 2 - Don’t breathe 2 திரை விமர்சனம்

போரில் கண் பார்வை இழந்த ஸ்டீபன் லேங் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டையும் வீட்டில் இருக்கும் பொருட்களையும் திருட, திருட்டு கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைய, அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து விரட்டுகிறார் ஸ்டீபன் லேங்.

முதலில் ஹீரோவாக காட்டிவிட்டு பின்னர் அவர் எப்படிப்பட்ட வில்லன் என்பதையும் முதல்பாகத்தில் சொல்லி இருப்பார்கள். தற்போது வந்துள்ள இரண்டாம் பாகத்தில், எட்டு வருடங்கள் கழித்து நடப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் ஸ்டீபன் லேங் தனது வளர்ப்பு மகளுடன் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

அவளை எங்கும் வெளியே செல்ல அனுமதிக்காமல் பாதுகாத்து வருகிறார். அந்த சமயத்தில் குழந்தையைத் தேடி ஒரு கும்பல் வீட்டிற்குள் நுழைகிறது. யார் அந்த கும்பல்?, அவர்கள் ஏன் ஸ்டீபன் லேங் வளர்க்கும் குழந்தையைத் தேடுகிறார்கள்? என்பது தான் படத்தின் மீதிக்கதை. 

நாயகன் ஸ்டீபன் லேங் முதல் பாகத்தைப் போல் இந்தப் பாகத்திலும் அசத்தி இருக்கிறார். கண் தெரியாத ஒருவரின் நடவடிக்கைகளை அழகாகவும், மிரட்டும் விதமாக செய்திருப்பது சிறப்பு. மேலும் பிரெண்டன் செக்ஸ்டான், மேட்லின் கிரேஸ் ஆகியோரின் நடிப்பும் கச்சிதம்.

ரோடோ சயாகியூஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். மொத்தக் கதையும் இருட்டில் சேஸிங், ஆக்‌ஷன் என சென்று கொண்டிருக்கிறது. முதல் பாகத்தைப் போல் இந்த படத்தையும் சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதை அமைத்துள்ள விதம் ரசிக்க வைக்கிறது.

படத்தின் கதை முழுக்க இருட்டில் பயணித்தாலும், ஒளிப்பதிவாளர் பெட்ரோ லூக் மிக அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். ரோக் பெனோஸின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலம். 

‘Don’t breathe’ 2 - விறுவிறுப்பிற்கு குறைவில்லை

Post a Comment

0 Comments