#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

ரஜினியின் திரை வாழ்வை காப்பாற்றிய பில்லா

ரஜினியின் திரை வாழ்வை காப்பாற்றிய பில்லா


1980-களில் ரஜினி திரையுலகில் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்தபொழுது, ரஜினிக்கு திடீர் சறுக்கல் ஏற்பட்டது. இடைவெளியின்றி படப்பிடிப்பு, வேலைப்பளு, மனஅழுத்தம் என்று பல காரணங்கள் சொல்லப்பட்டது. முக்கியமாக அப்பொழுது பிரபலமாக இருந்த நடிகை லதாவை காதலித்ததாக சர்ச்சையில் சிக்கினார் ரஜினி. எம் ஜி ஆர் க்கும் ரஜினிக்கும் மோதல் போக்கு என்றும் அன்று கிசுகிசுக்கப்பட்டது.

ரஜினிக்கு ஏற்கனவே பரிட்சயமான பத்திரிகையாளரோடு ஒரு புறம் மோதல் ஏற்பட காரை அவர் மீது மோதி கொலை செய்ய முயற்சி செய்ததாக வழக்கும் பதியப்பட்டது. அந்த பத்திரிகையாளர் ரஜினிக்கு கிறுக்கு பிடித்து விட்டது என்று சொல்ல, ரஜினிக்கு என்ன ஆச்சு? என்ற அதிர்ச்சி அனைவருக்குமே ஏற்பட்டது. அவரை வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்த சின்னப்பத்தேவருக்கும் இவற்றை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. நம்புவதா அல்லது இது வெறும் சர்ச்சையா என்று குழம்பினார்.

இப்படி இன்றைய சிம்புவுக்கெல்லாம் அதிர்ச்சி தரும் விதமாக தொடர் சர்ச்சையில் சிக்கனார் ரஜினி. ரஜினியின் திரைவாழ்வு முற்றுப்பெற்று விடுமோ என்று சொல்லும் அளவிற்கு அவருக்கு பல சிக்கல்கள் இருந்தன. அந்த நேரத்தில் தர்மயுத்தம் திரைப்படம்  வெளிவந்து வெற்றி அடைந்தது. மேலும் இந்த சர்ச்சைகளையெல்லாம் தகர்க்கும் விதமாக பில்லா திரைப்படம் வெளியானது.

அமிதாப்பச்சன் ஹிந்தியில் நடித்த டான் படத்தின் ரீமேக்-காக பில்லா 26 ஜனவரி 1980-ம் வருடம் வெளியானது. ரஜினியின் இந்த படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்தது. அதன் பிறகு ரஜினி நடித்த டான் கதாபாத்திரங்களுக்கு இந்த படம்தான் அடிப்படை என்று சொல்லலாம். இந்த திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதிய நாட்டுக்குள்ள எனக்கொரு பேருண்டு பாடல் ரஜினியின் தொழில் எதிரிகளுக்கு பதில் சொல்லும் விதமாக அமைந்தது. யார் கேட்டாலும் இப்பொழுதும் அந்த பாடல் ஆறுதல் பாடலாக இருக்கும்.

இந்த படத்தின் ரீமிக்ஸ் படமாக 2007ஆம் ஆண்டு அஜித் நடிக்க பில்லா வெளியானது. என்ன ஆச்சர்யம்? அஜித்திருக்கும் அப்பொழுது அதே போன்ற கடினமான சூழ்நிலை. தொடர் தோல்வி படங்கள், ஒரு வெற்றி கொடுத்தே ஆகவேண்டிய சூழல். இந்த சூழலில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. ஆக பில்லா எப்பொழுதும் ஸ்பெஷல்தான் "ரஜினிக்கும்-அஜித்திற்கும்" 

Post a Comment

0 Comments