#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

தன் இடத்தை தவற விட்ட நடிகர்கள்

தன் இடத்தை தவற விட்ட நடிகர்கள் 

ஒவ்வொரு நடிகரும் கடின உழைப்பால்தான் ஒரு இடத்தை பிடித்து இருப்பார்கள். அதை தொடர அனுதினமும்  நல்ல கதைகளை தேர்வு செய்ய மெனக்கெடுவார்கள். ஒரு சிலர் சில காலங்களிலேயே கிடைத்த இடத்தை தவற விடுவார்கள். அவர்களை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

கமல் 

1970-களில் தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டி பறந்தவர். காதல் இளவரசனாக பரிமளித்தவர். காதல் படங்களில் நடிப்பதை இவர் தவிர்க்க அந்த இடத்தை மோகன் கைப்பற்றினார். பின்பு இவர் மாஸ் படத்தை தவிர்க்க அந்த இடத்தை ரஜினி பிடித்து இன்றுவரை ஆண்டுகொண்டு இருக்கிறார்.


ராமராஜன் 

ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்தவர். சரியான கதைகளை தேர்வு செய்யாததால் அவரது இடத்தை தவற விட்டார்.


மோகன் 

இவரும் ரஜினி கமலுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர். கதை தேர்வு விஷயத்தில் தன் இடத்தை தவற விட்டார். அவரது இடத்தை கார்த்திக் கைப்பற்றினார்.

சரவணன் 

இவர் சின்ன விஜயகாந்த் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். இவரும் பொறுமையில்லாமல் சொந்த படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டார்.


ஆனந்த்பாபு 

நடிகர் நாகேஷின் மகனான இவர் சிறந்த நடிப்பு மற்றும் நடனத்தால் வேகமாக வளர்ச்சியடைந்தாலும், அதே வேகத்தில் சரிவை சந்தித்தார். அந்த நேரத்தில் இவர் போதை பழக்க வழக்கங்களால் சரிவை சந்தித்தார் என பேசப்பட்டது.

பிரசாந்த் 

முதல் படத்திலிருந்து வெற்றிகொடிகட்டிக்கொண்டு இருந்தவர். அஜித் விஜய்க்கு முன்பே தொடர் ஹிட் படங்கள் கொடுத்தவர். சில சில சரிவுகள் இருந்தாலும் நன்றாகவே நடித்துக்கொண்டுதான் இருந்தார். அவரது திருமணவாழ்வு பிரச்சனை, ஆக்சன் ஹீரோ ஆசை அனைத்தும் சேர்ந்து தொடர் தோல்வியில் தள்ளியது.


சிம்பு 

"ஐயம் எ லிட்டில் ஸ்டார்" என பாடிக்கொண்டு சிறு வயதிலிருந்தே சினிமாவில் இருக்கும் நடிகர். இவர் திறமைக்கு பெரும் உயரத்தில் இருக்க வேண்டிய நடிகர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வளர்பருவத்தில் பரிமளித்தவர்களில் இவரும் ஒருவர். கண்ட நேரத்தில் சூட்டிங் வருவது போன்ற சர்ச்சைகளாலும், வாலு படம் வெளியாகாமலும் கடினமான சூழ்நிலைகள் இவருக்கு இருந்தன. 


கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வனவாசம் போல் இவருக்கு படங்கள் வெளியாகாமல் இருந்தது. இவருடன் வந்த, இவருக்கு போட்டி நடிகர் என கருதப்படும் தனுஷ் டாப் நடிகர்கள் வரிசையில் இருக்கிறார். இவரது இடத்தைத்தான் விஜய்சேதுபதியும், சிவகார்த்திகேயனும் பிடித்துள்ளனர். இவர் மறுபடியும் தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்து விட்ட இடத்தை பிடிக்க வாழ்த்துக்கள். 


Post a Comment

0 Comments