#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

ப்ரமோஷன் பெற்ற ஹீரோக்கள் - துணை நடிகர் டூ ஹீரோ

ப்ரமோஷன் பெற்ற ஹீரோக்கள் - துணை நடிகர் டூ  ஹீரோ

 சிவாஜி கணேசன் 

மேடை நாடகங்களில் துணை கதாபாத்திரமாகவும், பெண் வேடத்திலும் குறிப்பாக நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரனுக்கு ஜோடியாக பெண் கதாபாத்திரத்திலும் நடித்த அனுபவமிக்க சிவாஜிகணேசனுக்கு முதல் படவாய்ப்பாக பராசக்தி படம் கிடைத்தது. இவர் முதல் படத்திலேயே நல்ல நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார்.

எம் ஜி ஆர் 

எம் ஜி ஆர் நாடகத்தில் ஆரம்பித்து படிப்படியாக திரையுலகில் உச்சத்தை அடைந்தவர். தியாகராஜபாகவதர் நடித்த படங்களில் சிறு சிறு வேடங்களில் ஆரம்ப காலகட்டங்களில் நடித்துள்ளார். அவருடைய 40 வயதிற்கு பின்தான் முதல் வரிசையை பிடிக்க முடிந்தது என்பது ஆச்சர்யமான செய்தி. அதன் பின் திரைஉலகையும் தமிழகத்தையும் அவர் ஆண்டது அனைவரும் அறிந்த ஒன்று.

எஸ் எஸ் ராஜேந்திரன் 

இவரும் நடக்க உலகில் இருந்து வந்தவர். சினிமாவில் பராசக்தியில் ஒரு துணைப்பாத்திரத்தில்தான்  நடித்திருப்பார். முக்கியத்துவமும் இருக்கும். அதன் பின் கதாநாயகனாக பல படங்களில் நடித்தார்.

ரஜினி 

ரஜினியும் துணை நடிகராகத்தான் திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பின் கமலுடன் நிறைய படங்களில் நடித்து, அவரே இன்று ஆச்சர்யப்படும் அளவிற்கு உச்சத்தில் இருக்கிறார்.

சரத்குமார் 

இவரும் நிறைய படங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடித்துள்ளார். ஊமை விழிகள் படத்திற்கு பிறகு வில்லனாக அதன் பின்னும் துணை நடிகராக கேப்டன் பிரபாகரன் படத்திலும் பின்பு படிப்படியாக கதாநாயக அந்தஸ்த்தைப்பெற்றார்.

ராஜ்கிரண் 

இவர் அடிப்படையில் ஒரு விநியோகஸ்தர். இவரும் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். பின் என் ராசாவின் மனசிலே படத்திற்கு பிறகு கதாநாயகனாக தொடர் வெற்றி கொடுத்தார். இப்பொழுது குணசித்திர நடிகராக கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

விமல் 

விமல் பல படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்துள்ளார். பசங்க, களவாணி படத்திற்குப்பின் இன்றைய விஜய்சேதுபதி போல தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.

விதார்த் 

இவரும் விமல் போலவே பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மைனா பட வெற்றிக்குப்பின் இவருக்கும் திரை உலகில் ஒரு நல்ல இடம் கிடைத்தது.

விஜய் சேதுபதி 

விஜய் சேதுபதி சினிமாவில் கூட்டத்தில் ஒரு நபராக நடித்தது இல்லாமல் சீரியல்களிலும் நடித்துள்ளார். பீட்சா பட வெற்றிக்குப்பின் இப்பொழுது இவர் மோஸ்ட் வான்டெட் ஹீரோ.

பாபி சிம்ஹா 

இவரும் நிறைய படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்துள்ளார் மற்றும் நிறைய குறும்படங்களிலும் நடித்துள்ளார். ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு ஒரு நல்ல இடம் கிடைத்தது. சில சர்ச்சைகள் இவரை சுற்றி இருந்தாலும் இவரும் எதிர்பார்ப்பிற்குரிய நடிகர்தான்.


Post a Comment

0 Comments