#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

இன்னொரு முறை இந்த மேஜிக் நிகழுமா ரஜினி சார் - பாட்ஷா (26 years of baashha)

இன்னொரு முறை இந்த மேஜிக் நிகழுமா ரஜினி சார் - 26 years of  பாட்ஷா 

 1.பாட்ஷா படம் ஆர் கே செல்வமணி, மனோபாலா போன்ற இயக்குனர்கள் இயக்குவதாக இருந்து கடைசியாக சுரேஷ் கிருஷ்ணாவுக்கு சென்றது.

2.ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ஹம் பட பாதிப்பில் தன்னிடம் இருந்த லைனை டெவெலப் செய்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் பாட்ஷா.


3.அண்ணாமலை படத்திற்கு பிறகு இந்த கதையை ரஜினியிடம் சொல்லி காத்திருந்ததாக சொல்லி இருக்கிறார்.

4.படம் எடுத்துக்கொண்டு இருக்கும்போதே, வெளியீட்டின்போது கதை பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காக அமிதாப்பச்சன் நடித்த ஹம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க சொல்லி விட்டாராம் ரஜினி.

5.ஆட்டோவிற்கு பதிலாக கார்தான் முதலில் பயன்படுத்தப்படுவதாக இருந்ததாம். டிஸ்கஷனில் ஆட்டோவாக மாற்றி இருக்கிறார்கள்.

6.அந்த பிரபல வசனமான "ஒரு தடவ சொன்னா" வசனம் மறைந்த "நரசிம்மா" பட இயக்குனர் திருப்பதிசாமியின் பேச்சு வழக்கை கவனித்து ரஜினி உருவாக்கிய வசனம். அதற்காக ரஜினி அவருக்கு சன்மானம் கொடுத்தார் என்ற தகவலும் உண்டு.

7.நக்மா, பிளாஷ்பேக்-ல் வரும் ஆன்டனி மகள் என நிறைய பேருக்கு குழப்பம் உள்ளது. சந்தேகமே வேண்டாம் நக்மா, பாட்ஷாவிடம் உயிர்ப்பிச்சை வாங்கி தப்பிக்கும் கேசவன் பொண்ணுதான்.

8.ஆனந்தரராஜ் கேரக்டர் படத்தில் இல்லாமல் திடீரென கடைசி நேரத்தில் உருவாக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

9. படத்தின் இடைவேளையில் வரும் சண்டைக்காட்சி நம்மை புல்லரிக்க வைக்கும். ரஜினியின் வசீகர கண்களும் நடிப்பும் அட! அட! அடடா! செமயா இருக்கும்.

10.முதல் தங்கை திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாரிடம் ரஜினி பேசும் வசனம்... அந்த பொறுப்பு, ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு அண்ணனும் கற்றுக்கொள்ள வேண்டிய செயல். ஸ்டைல் மன்னன் மட்டும் அல்ல ரஜினி நடிப்பிலும் மன்னன்தான்.

11.பாட்ஷா, மாணிக்கம் இரண்டு பாத்திரங்களுக்கும் வெறித்தனமான வித்யாசத்தை காட்டி இருப்பார் ரஜினி.

12.தேவாவின் இசையில் பின்னணி இசையும், பாடல்களும் தேனினும் இனிய கற்கண்டு.

13.சிறிய தொய்வு கூட இல்லாத எடிட்டிங்.

14.அடுத்து என்ன என ஆர்வத்தை தூண்டும் திரைக்கதை.

15.சரண்ராஜ் மற்றும் ரகுவரன் பற்றி பேசாமல் இந்த கட்டுரை நிறைவு பெறாது. பாட்ஷாவின் ஆணிவேரே இவர்கள்தான். நடிப்பில் சும்மா வெளுத்து வாங்கி இருப்பார்கள்.

16.ரஜினியிடம் சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷா-2 பற்றி சொல்லி இருக்கிறார். அதற்கு ரஜினி "பாட்ஷா படம் ஒன் டைம் மேஜிக்" அதனால அதை திரும்ப எடுக்க வேண்டாமே என்று சொன்னாராம். இன்னொரு முறை இந்த மேஜிக் நிகழுமா ரஜினி சார்?




Post a Comment

0 Comments