#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

தீதும் நன்றும் - திரை விமர்சனம்:- பருத்திவீரன், சுப்ரமணியபுரம் பேட்டனில் மற்றுமொரு படம்

தீதும் நன்றும் - திரை விமர்சனம்:- பருத்திவீரன், சுப்ரமணியபுரம் பேட்டனில் மற்றுமொரு படம்


முன்னொரு காலத்தில் எதார்த்த படங்களும், அதிகமாக எதிர்மறை கிளைமாக்ஸ் உடனும் பல படங்கள் வந்து கொண்டிருந்தன. 
அதே நேரத்தில் படம் அனைவரையும் உறைய வைக்கும் படமாகவும் வெளிவந்து கொண்டிருந்தது. அந்த வகையில் இந்த படம் நல்ல முயற்சி எனலாம்.

சுப்ரமணியபுரம், பருத்திவீரன் பேட்டன் படமாக வந்துள்ளது. அதே சமயம் அந்த விறுவிறுப்பு இருக்கிறதா? 

ராசு ரஞ்சித்தும், ஈசனும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே பெற்றோர்களை இழந்தவர்கள். பகலில், மீன் மார்க்கெட்டில் வேலை செய்கிறார்கள். இரவில், முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். இவர்களுடன் இன்னொரு நண்பர் சந்தீப்ராஜும் கொள்ளையில் சேர்ந்து கொள்கிறார்.

ஈசனுக்கும், அபர்ணா பாலமுரளிக்கும் இடையே காதல் மலர்கிறது. அபர்ணாவின் தாயாரின் எதிர்ப்பை மீறி, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார், ராசு ரஞ்சித். அதேபோல் இவருக்கும், லிஜோமோள் ஜோசுக்கும் காதல் துளிர்க்கிறது. காதல் ஜோடிகள் சந்தோசமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் நிலையில், ராசு ரஞ்சித்தும், ஈசனும் மீண்டும் கொள்ளைக்கு புறப்படுகிறார்கள்.

ஈசனை மனைவி அபர்ணா தடுக்கிறார். தன் வயிற்றில் குழந்தை வளர்வதாக கூறி, திருட்டுக்கு போக வேண்டாம் என்று உருகுகிறார். அவர் தூங்கிய பிறகு ஈசன் நண்பர்களுடன் போய் ஒரு மதுக்கடையில் கொள்ளையடிக்கிறார். அப்போது மூன்று பேரையும் போலீஸ் சுற்றி வளைக்கிறது. சந்தீப்ராஜு தப்பி ஓடுகிறார். ராசு ரஞ்சித்தையும், ஈசனும் போலீசிடம் சிக்கிக் கொள்கிறார்கள். இதையடுத்து இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக் கதை.


ரவுடியிசப் படங்கள் தமிழ் சினிமாவில் அடிக்கடி வெளிவரும். எளிதில் கையாளக் கூடிய ஒரு ஆக்ஷன் படமாக அந்தப் படங்கள் அமைந்துவிடும். அனுபவ இயக்குனர்கள் முதல் அறிமுக இயக்குனர்கள் வரை பலரும் அப்படியானப் படங்களை விதவிதமாகக் கொடுத்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக வட சென்னையை மையப்படுத்தி பல ரவுடியிசப் படங்கள் ஒவ்வொரு வருடமும் தவறாமல் வருவதுண்டு.

அந்த வரிசையில் இந்த வருடத்தில் வந்துள்ள முதல் வட சென்னை ரவுடியிசப்படம் தீதும் நன்றும். அறிமுக இயக்குனர் ராசு ரஞ்சித் கொஞ்சம் ஆச்சரியப்படும் விதத்தில் ஒரு யதார்த்தமான படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். அவரே நாயகர்களில் ஒருவராகவும் நடித்துள்ளார். இரண்டிலுமே அவருக்கு பாஸ் மார்க் கிடைத்துள்ளது.

ராசு ரஞ்சித், கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருப்பதுடன், படத்தை இயக்கியும் உள்ளார். அவரே இயக்குனர் என்பதால் அவருடைய கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், நேர்மையாக கதை சொல்லியிருக்கிறார். லிஜோமோளுடன் காதல், எதிரிகளுடன் மோதல் என சராசரி கதாநாயகனுக்கு உரிய வேலைகளை கச்சிதமாக செய்து இருக்கிறார்.

அபர்ணா முரளிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு. காதலியாக கசிவதும், குழந்தைக்கு தாய் ஆகி கஷ்டத்தில் தவிப்பதுமாக பெயரை தக்க வைக்கிறார். லிஜோ மோல் காதலில் போக்கு காட்டி ராசுவை அலையவிடுவது காதல் சீண்டல்கள். கண்களால் கவிதை மொழி பேசி கவர்கிறார் லிஜோ. வில்லன்கள் சந்திப் ராஜ், ராஜேந்திரன் ஆகிய இருவரும் மிரட்டலான தேர்வு. 

இயக்குனர் ராசு ரஞ்சித்திற்கு இது முதல் படம். படம் முழுக்க அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பினும், கதை சொன்ன விதத்திலும், படத்தை காட்சிப்படுத்திய விதத்திலும், கைத்தட்டல்களை பெறுகிறார் இயக்குனர் ராசு ரஞ்சித். படத்தொகுப்பும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதையும் ராசு ரஞ்சித் தான் செய்துள்ளார்.

தாதா, ரவுடி கும்பல், முகமூடி கொள்ளையை திரைக்கதையாக கொண்ட படம் என்பதால் இரவு நேர காட்சிகள் ஏராளம். அதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார், சி சத்யாவின் பின்னணி இசையும். கெவின் ராஜின் கேமராவும் படத்தின் தரத்தை ஒரு படி உயர்த்துகிறது.

ஆனால் அடுத்தடுத்தக் காட்சியை யூகிக்க முடிவதுடன் எல்லை மீறிய சண்டை, ரத்தக் காட்சிகளும், ஏற்கனவே பார்த்து பழகிய பழைய படச் சாயல்களும் கொஞ்சம் சலிப்பைக் கொடுக்கிறது.

தீதும் நன்றும் -  பருத்திவீரன், சுப்ரமணியபுரம் பேட்டன் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

Post a Comment

0 Comments