🔔 இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ் 🔔
* முதல்வரிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்
* சசிகுமாரின் அடுத்த படம்
* மலையாள படத்தில் அஜித்
முதல்வரிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்
பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழக்கம் போல அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர். அவர் என்ன சொல்வது என யோசித்து மையமாக சிரித்துவிட்டு சென்றாராம். இது ஒருபுறம் இருக்க ரெடியான படத்தை அஜித் முழுமையாக பார்த்தாராம். ஏ சென்டர் படமாக வந்துள்ளதாம். அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் அளவிற்கு மசாலா சேர்த்து எடுக்க சொல்லி இருக்கிறாராம் அஜித்.
சசிகுமாரின் அடுத்த படம்
சசிகுமார் நடித்த ராஜவம்சம் படம் ரிலீசிற்கு தயாராக உள்ளதாம். மீண்டும் அதே தயாரிப்பாளருக்கு கழுகு இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறாராம்.
மலையாள படத்தில் அஜித்
மலையாளத்தில் பரோஸ் - நிதி காக்கும் பூதம்- 3டி என்னும் படத்தை மோகன்லாலே இயக்குகிறாராம்.சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறாராம் . அஜித் நடிக்க ஓ கே சொல்லி இருக்கிறராம். அஜித்தின் கதாபாத்திரம் எப்படிப்பட்டது, கேமியோ கதாபாத்திரமா அல்லது படத்தின் மிக முக்கிய கதாபாத்திரமா என்னும் தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
0 Comments