#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

ஒரே கதையில் வெளியான இரண்டு படங்கள்

ஒரே கதையில் வெளியான இரண்டு படங்கள்

ஒரு படம்  எடுக்கும்பொழுது அந்த இயக்குனர், தான் ஒரு கதையை சிந்தித்து தனித்தன்மையோடு எடுப்பதாக நினைத்துக்கொண்டுதான் எடுப்பார். அதே நேரத்தில் அந்த படம் நிறைவடைந்து வெளிவந்த பின் அந்த படமானது ஏற்கனவே வெளிவந்து வேறொரு திரைப்படத்தின் காட்சியோடு பொருந்தி போகும் அல்லது அந்த படத்தின் அப்பட்டமான காப்பி போல தோன்றும். அப்படிப்பட்ட படங்களின் தொகுப்பை இந்த கட்டுரையில் காணலாம்.

உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் / நந்தவனத்தேரு 

1995 ஆம் ஆண்டு ஆர் வி உதயகுமார் இயக்கத்தில், இளையராஜா இசையில் கார்த்திக், ஸ்ரீநிதி நடிப்பில் வெளிவந்த படம் நந்தவனத்தேரு. இந்த படத்தின் கதைப்படி, தான் விரும்பிய பெண்ணுக்கு சினிமாவில் பாடகி வாய்ப்புக்காக நாயகன் அலைவதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்த படத்தில் பாடல்கள் நன்றாக இருந்தாலும், படம் வெற்றிப்படமாக அமையவில்லை.

1998 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில், எஸ் ஏ ராஜ்குமார் இசையில் கார்த்திக், அஜித், ரோஜா, ரமேஷ் கண்ணா, மதன் பாப், மௌலி, சத்யப்ரியா என நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இந்த படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்திலும் தான் விரும்பும் ஒரு பெண்ணுக்காக சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து அந்த வாய்ப்பை பெற்றுத்தரும் நாயகன் என கதை அமைக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் இந்த படத்திற்கும், நந்தவனத்தேரு படத்திற்கும் கிளைமாக்ஸ் தவிர பெரிய வித்தியாசம் இருக்காது.

பூவே உனக்காக / கோகுலம் 

1993 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில், சிற்பி இசையில், அர்ஜுன், ஜெயராம், பானுப்ரியா, சின்னி ஜெயந்த், வடிவேல் நடித்து வெளிவந்த திரைப்படம் கோகுலம். இந்த படத்தின் கதைப்படி இறந்த தன்னுடைய காதலனின் குடும்ப பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டு செயல்படும் நாயகி என அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. 

1996 ஆம் ஆண்டு அதே விக்ரமன் இயக்கத்தில் எஸ் ஏ ராஜ்குமார் இசையில் விஜய், அஞ்சு அரவிந்த், சங்கீதா , சார்லி, மதன் பாப், நாகேஷ், நம்பியார் என பலர் நடிக்க வெளிவந்த திரைப்படம் பூவே உனக்காக. 

இந்த படத்தின் கதைப்படி, தான் காதலித்த பெண்ணின் காதலுக்காக அவர்களின் குடும்பங்களை இணைக்கும் வேலையை நாயகன் செய்வதாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். திரைக்கதையில் சில மாற்றங்கள் தெரிந்தாலும் ஒப்பீட்டளவில் கோகுலம் படத்தை போலத்தான் பூவே உனக்காக இருக்கும்.

ஜென்டில் மேன் / நான் சிகப்பு மனிதன் 

1985 ஆம் ஆண்டு எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையில் ரஜினிகாந்த், அம்பிகா, பாக்கியராஜ், சத்தியராஜ் நடித்த இந்த படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 

இந்த படத்தின் கதைப்படி, கல்லூரி விரிவுரையாளராக பணிபுரியும் ரஜினிகாந்திற்கு சத்தியராஜ் கும்பலுடன் மோதல் ஏற்பட, ரஜினியின் தங்கையை சத்தியராஜ் கும்பல் வன்புணர்வு செய்து விடுவார்கள். ரஜினியின் தங்கையும் தற்கொலை செய்து கொள்வார். இதன் பின் ரஜினி இது போன்ற மனிதர்களை குறி வைத்து கொலை செய்வார். இவ்வாறு கதை அமைக்கப்பட்டிருக்கும்.

1993 ஆம் ஆண்டு அர்ஜுன், மதுபாலா, கௌண்டமணி, செந்தில், நம்பியார், வினித் என பலர் நடிக்க இயக்குனர் சங்கரின் முதல்படமான ஜென்டில் மேன் திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்தின் கதைப்படி ஒரு அரசியல் வாதியின் சதியால் கல்வி மறுக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் தன் நண்பன் வினித்திற்காக ராபின் வுட் ஸ்டைலில் பணம் இருப்பவர்களிடமிருந்து, பணத்தை திருடி இல்லாதவர்களுக்கு கொடுக்கும் நாயகன் என கதை அமைக்கப்பட்டிருக்கும். 

தன்னை யார் என வெளிக்காட்டிக்கொள்ளாமல் நாயகன் செய்யும் கொலைகள் நான் சிகப்பு மனிதன் படத்திலும், கிட்டத்தட்ட அதே காரணத்தோடு அதாவது தன்னை யார் என வெளிக்காட்டிக்கொள்ளாமல் நாயகன் செய்யும் திருட்டுகளும்தான் இவ்விரு படங்களுக்கும் படங்களுக்கும் உள்ள வித்யாசமாக இருக்கும்.

Post a Comment

0 Comments