#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

தமிழ் சினிமாவின் சிறந்த இடைவேளைக் காட்சிகள்

தமிழ் சினிமாவின் சிறந்த இடைவேளைக் காட்சிகள்

நாம் ஒரு படம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது இந்த படத்தை தொடர்ந்து பார்க்கலாமா? அல்லது இடைவேளை காட்சியோடு தப்பி ஓடி விடலாமா? என்று தீர்மானிப்பது படத்தின் கதையும், சுவாரஸ்யமான திரைக்கதையும்தான். அப்படி இருக்கும்பொழுது அந்த இடைவேளைக் காட்சியானது படத்தின் அடுத்த பாதி எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக இருக்க வேண்டும். அந்த வகையில் கடந்த கட்டுரையில் "பூவே உனக்காக" படத்தின் இடைவேளைக்காட்சி பற்றி பார்த்தோம் இதில் கட்டுரையின் பார்ட் 4 ஆக  "நீ வருவாய் என" படத்தின் இடைவேளைக்காட்சியைப் பற்றி பார்ப்போம்.

1999 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜகுமாரன் இயக்கத்தில், எஸ் ஏ ராஜ்குமார் இசையில் பார்த்திபன், அஜித்,தேவயானி, ரமேஷ் கண்ணா, வையாபுரி, சுவலட்சுமி, சத்யப்ரியா, ஜெய் கணேஷ், சண்முகசுந்தரம், வடிவுக்கரசி என  நடித்து வெளிவந்த திரைப்படம் "நீ வருவாய் என".

இந்த படத்தின் கதையைப் பொறுத்தவரை, பார்த்திபன் அந்த ஊருக்கு பேங்க் மேனேஜெராக வருவார். அங்கு அவர் இதுற்கும் வீட்டுக்கு அருகில் இருக்கும் தேவயானி அவரிடம் இயல்பாக பழகுவார், அக்கறையாக கவனித்து கொள்வார். பார்த்திபனும் ஒரு கட்டத்தில் தேவயானி தன்னை காதலிப்பதாக நினைத்துக்கொண்டு அவர் வீட்டில் சொல்லி, அவர்களையும் வரவழைத்து, குடும்ப சகிதமாக பெண் பார்ப்பார்கள். ஆனால், அப்பொழுதுதான் கதையில் ஒரு ட்விஸ்ட் நடக்கும். தேவயானி இந்த திருமணத்தில் விருப்பமில்லை எனக்கூறுவார். 

ஏன் என்னிடம் வலிய வந்து பழகினாய், என்னிடம் அக்கறையாக நடந்து கொண்டாய். இவற்றையெல்லாம் செய்து விட்டு பிடிக்கவில்லை என்றால் என்ன அர்த்தம் என்று கேட்பார்?

உடனே தேவயானி, சம்பந்தமில்லாமல் பார்த்திபனின் கண் பராமரிப்பை பற்றி பேசிக்கொண்டிருப்பார். பார்த்திபன் கடுப்பாகி "நான் என்ன கேட்டுட்டு இருக்கேன், நீ சம்பந்தம் இல்லாம கண் பராமரிப்பு பற்றி பேசிட்டு இருக்க" என சொல்வார்(நாமும் அதே மன நிலையில்தான் படம் பார்த்துக்கொண்டிருப்போம், இது என்ன லூசா என்பது போல).

அப்போதுதான் தேவயானி சொல்வார், அது உங்கள் கண்கள் அல்ல.. அது இறந்து போன தன் காதலனின் கண்கள் என.. 

அப்பொழுதுதான் அஜித் என்ட்ரியுடன் இன்டெர்வெல் போடுவார்கள். அட இது புதுசா இருக்கே என்பது போல இருக்கும்! இடைவேளைக்கு பின் வரும் காட்சிகளும் அதற்கு நியாயம் செய்வது போல்தான் இருக்கும்.

 "பாட்ஷா"

1995 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், பாலகுமாரன் வசனத்தில், தேவா இசையில், ரஜினிகாந்த் நக்மா, ரகுவரன், விஜயகுமார்,சத்யப்ரியா, யுவராணி, ஆனந்தராஜ், ஜனகராஜ், தாமு என பலர் நடிக்க வெளிவந்த திரைப்படம் பாட்ஷா.

இந்த படத்தின் கதைப்படி "பாம்பே"யைக் கலக்கும் ஒரு தாதா தன் தந்தையின் கடைசி விருப்பத்திற்காக, தன் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு புலம் பெயர்ந்து தன் அடையாளத்தை மறைத்து சாதாரண மனிதனாக வாழ்கிறான். அங்கு அவனும் அவன் குடும்ப நபர்கள் சந்திக்கும் பிரச்சனைதான் கதை. திரைக்கதையில் இது ரிவர்ஸ் பேட்டனில் படமாக்கப்பட்டிருக்கும்.  

ரஜினிக்கு பின் ஒரு ரகசியம் இருக்கிறது என்பதையும், அவர் சாதாரண ஆள் அல்ல என்பதையும் திரைக்கதையில் நமக்கு ஆங்காங்கே "சஸ்பென்ஸ்" ஆக கோடிட்டுக் காட்டியிருப்பார்கள். இயக்குனர் செல்வராகவன் ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால் "ஹிடன் லேயர்ஸ்" என சொல்லலாம்.

இவ்வாறு திரைக்கதை இயல்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும்பொழுது,

இவர்கள் குடியிருக்கும் அந்த ஏரியாவின் தாதாவான ஆனந்தராஜை முறைத்துக்கொள்வார் ரஜினியின் தம்பி. தம்பிக்காக தான் அடி வாங்கி தம்பியைக் காப்பாற்றுவார் ரஜினி. 

அதன் பின் ரஜினியின் தம்பி சும்மா இருக்காமல் ஆனந்தராஜை தூக்கி ஜெயிலில் போட்டு விடுவார். ஆனந்தராஜ்தான் அந்த ஏரியாவின் தாதாவாயிற்றே அன்று மாலையே வீட்டுக்கு வந்து விட்டு, ரஜினி வீட்டுக்கு பிரச்சனை கொடுக்க வந்து விடுவார்.

அப்பொழுது ரஜினியின் தம்பி எகிற அவரை ஆனந்தராஜின் ஆட்கள் சில அடி கொடுத்து பிடித்துக்கொள்வார்கள். அப்பொழுது ஆனந்தராஜ் ரஜினியின் தம்பியிடம், உன் தங்கையை வன்புணர்வு செய்ய போகிறேன் முடிந்தால் தடுத்துப்பார் என சொல்லிவிட்டு தங்கை யுவராணியை ஆம்னி வேனில் ஏற்ற முயற்சி செய்வார். அப்பொழுது நடக்கும் தகராறில் யுவராணியை ஆனந்தராஜ் அறைந்து தள்ளுவார். யுவராணி போய் விழும் நேரத்தில் ஒரு கை தாங்கி பிடிக்கும். அந்த கைகள் ரஜினியின் கைகள்தான்.

கையில் ரத்தத்துடன் தன் அப்பாவி முகத்தை மாற்றி கோபம் கொந்தளிக்க அவர் அடிக்கும் காட்சி இருக்கிறதே! பார்க்கும் நமக்கு புல்லரித்துப்போகும். அந்த நீண்ட சண்டைக்காட்சி சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

ஆனந்தராஜை கட்டி வைத்து அடிக்கும் காட்சியும், இந்த சண்டை முடிந்து ரஜினியின் சகாக்கள் அவரது கைகளுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியும் ரசிக்கும்படி இருக்கும்.

இந்த காட்சிகளுக்கு பிறகு, ரஜினியின் அந்த அல்டிமேட் பஞ்ச் "நான் ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்ன மாதிரி" என ஸ்டைலாக அந்த இடைவேளை காட்சி அமைக்கப்பட்டிருக்கும். பார்க்க அட்டகாசமாக இருக்கும்.

இந்தியன்

1996 ஆம் ஆண்டு சங்கர் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, நெடுமுடி வேணு, கௌண்டமணி, செந்தில் நடிப்பில் பிரமாண்ட படைப்பாக வெளிவந்தது இந்தியன் திரைப்படம்.

இந்த படத்தின் கதைப்படி, லஞ்சம் பெரும் அரசு அதிகாரிகளை தேடி பிடித்து கொலை செய்வார் சுதந்திர போராட்ட வீரரான கமல்ஹாசன்.

போலீஸ் ஒருபுறம் அந்த கொலைகாரன் யார் என துப்பு துலக்கிக் கொண்டு இருக்கும்.

இந்த நேரத்தில் பல வித தேடுதல்களுக்கு பிறகு கொலையாளியான கமல்ஹாசனை நெருங்கும் நெடுமுடி வேணு, அவரின் வீட்டுக்கு செல்வார். அந்த நேரத்தில் அங்கு கமல் இருக்க மாட்டார்.

அங்கே வீட்டில் இருக்கும் சுகன்யா, நெடுமுடி வேணுவிடம் நீங்க யாரு? என கேட்கும் போது, தான் சுதந்திர போராட்ட வீரர்களுக்காக அரசு கொடுக்கும் தாமரைப் பட்டயம் வாங்குவதற்காக, சுதந்திரப் போராட்ட தியாகியின் சிபாரிசு தேவைப்படுவதால் வாங்க வந்திருப்பதாகவும் சாதாரணமாக சொல்வார். 

உடனே கடுப்பாகும் சுகன்யா, நெடுமுடி வேணுவிடம்.. சுதந்திர போராட்டம் னா உனக்கு அவ்ளோ சாதாரணமா போச்சா? என்று சுதந்திரம் வாங்கிய கதையை பிளாஷ்பேக்காக சொல்வார்.

பிளாஷ்பேக் முடிந்த பின், சுகன்யாவிடம் நெடுமுடி வேணு " என்ன மன்னிச்சிருங்க விஷயம் தெரியாம பேசிட்டேன் என பேசி முடிக்கும் போது கமல் அங்கு வந்து விடுவார்.

அந்த பழைய கால ஈஸி சேரில் அமர்வார், நெடுமுடி வேணு கொண்டு வந்த பேப்பரில் தெளிவாக எழுதி கையெழுத்து போட்டு கொடுப்பார். 

"எனக்கு நிறைய வேல இருக்கு கிளம்புங்க" என்பார்.. நெடு முடி வேணு, துப்பாக்கியை எடுத்து கமலை கார்னெர் செய்ய முயற்சி செய்வார். 

ஆனால் கமல் கால் விரலால் வர்ம அடி  அடிக்க முயற்சி செய்ய, அதை தன் காலால் கமல் காலை மிதித்து தடுப்பார் நெடுமுடி வேணு.

இந்த நேரத்தில் அந்த ஈஸி சேரில் இருக்கும் ஒரு கட்டையை உபயோகித்து சாதூர்யமாக அடித்து, அதன் பின் கழுத்து வயிறு என வர்ம அடிகள் கொடுப்பார் கமல்.

இதில் நிலைகுலைந்து நெடுமுடிவேணு கீழே விழ..

கமல் சுகன்யாவை ஒரு பார்வை பார்ப்பார்..

இதை புரிந்து கொண்ட சுகன்யா உடனே துணிகளை அள்ளிக்கொண்டு தப்பிக்க தயாராவார். இருவரும் அந்த டிராக்டர் எடுத்துக்கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு தப்பிச்செல்வர்கள். அடுத்து என்ன என்ற ஆவலைத் தூண்டிய இந்த இடைவேளைக்காட்சி இப்பொழுது பார்த்தாலும் பரபரப்பாக இருக்கும்.

Post a Comment

0 Comments