வேழம் - திரை விமர்சனம்:- அசோக் செல்வனுக்கு மற்றுமொரு வெற்றிப்படமாக அமையுமா இந்த வேழம்?

வேழம் - திரை விமர்சனம்:- அசோக் செல்வனுக்கு மற்றுமொரு வெற்றிப்படமாக அமையுமா இந்த வேழம்?

ஊட்டியில் வாழும் அசோக் செல்வன், அதே ஊரில் இருக்கும் ஐஸ்வர்யா மேனனை காதலித்து வருகிறார். அதே சமயம் மர்மமான முறையில் சிலர் இறக்கிறார்கள். ஒருநாள் அசோக் செல்வனும், ஐஸ்வர்யாவும் பைக்கில் செல்லும் போது, மர்ம நபர்களால் ஐஸ்வர்யா கொல்லப்படுகிறார்.

காயங்களுடன் உயிர் தப்பிக்கும் அசோக் செல்வன், காதலி ஐஸ்வர்யா மேனனை கொலை செய்த மர்ம நபர்களை தேடி அலைகிறார். இறுதியில் அசோக் செல்வன் மர்ம நபர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

ஓ மை கடவுளே, மன்மத லீலை என அடுத்தடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அசோக் செல்வன் இந்த படத்திலும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்.

முதல் நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் சிறிது நேரம் வந்தாலும் ரசிக்க வைக்கிறார். தெகிடி படத்திற்கு பிறகு ஜனனியும், அசோக் செல்வனும் இணைந்து நடித்திருக்கிறார்கள். ஜனனி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

த்ரில்லர் கதையை மையமாக கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தீப் ஷாம். இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்கள் படத்திற்கு பலம். அடுத்தடுத்து வரும் காட்சிகள் யூகிக்க முடியாத அளவிற்கு படத்தை கொடுத்தது ரசிக்க வைக்கிறது. திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம்  இருந்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். 

ஜானு சந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம். சக்தி அரவிந்தின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க வைக்கிறது. 

வேழம் - த்ரில்லர் ரசிகர்களுக்கு


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments