ராக்கெட்ரி நம்பி விளைவு - திரை விமர்சனம்:- நடிகர், இயக்குனராக மாதவன்! மற்றுமொரு சூரரை போற்று ஆகுமா இந்த ராக்கெட்ரி?

ராக்கெட்ரி நம்பி விளைவு - திரை விமர்சனம்:- நடிகர், இயக்குனராக மாதவன்! மற்றுமொரு சூரரை போற்று ஆகுமா இந்த ராக்கெட்ரி?

ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் கொண்ட நம்பி நாரயணன், உலகப் புகழ் பெற்ற அமெரிக்கா பல்கலைகழகத்தில் ராக்கெட் தொடர்பான ஆராய்ச்சியை முடிக்கிறார். இதைத் தொடர்ந்து அவருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவில் பணிபுரிய அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதை மறுத்து இந்தியா திரும்பி, இஸ்ரோவில் இணைந்து இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பத்திற்காக பணியாற்றுகிறார்.

இந்த நிலையில் நம்பி நாராயணன் மீது தேச துரோக வழக்கு பாய்கிறது. போலீஸ் நம்பி நாராயணனை கைது செய்கிறது. இறுதியில் நம்பி நாராயணன் வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை. 

இந்திய அறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரியாக பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தை எடுத்திருக்கிறார்கள்.

நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் வாழ்ந்து இருக்கிறார். ஒவ்வொரு காலகட்டத்தில் வெவ்வேறு தோற்றத்தில் தன்னை மாற்றிக்கொண்டு அசத்தி இருக்கிறார். வெளுத்த தாடி, வெளியில் தெரியும் தொப்பை, வசன உச்சரிப்பு, உடல்மொழி என நடிப்பு அசுரனாக அசரடிக்கிறார்..

மாதவனுக்கு மனைவியாக நடித்திருக்கும் சிம்ரன், கன்னத்தில் முத்தமிட்டால் படத்திற்கு பிறகு தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மனமுடைந்துபோவது, அவமானங்களை எதிர்கொள்வது என அசாத்தியமான நடிப்பை கொடுத்திருக்கிறார். 

சில நிமிடங்களே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் சூர்யா. மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

நடிப்பது மட்டுமில்லாமல் இப்படத்தை இயக்கி இருக்கிறார் மாதவன். முதல் படம் போல் தெரியவில்லை. வெல் கம் இயக்குனர் மாதவன்!

முதல் பாதியில் ராக்கெட் தொழில்நுட்பம், அறிவியல் என திரைக்கதை நகர்வது பாமர மக்களுக்கு புரிந்து கொள்ள சற்று கடினமாகத்தான் இருக்கும். வேறு வழியில்லை கதையே அப்படிப்பட்டது எனும் போது புரிந்து கொள்ள முயற்சி செய்துதான் ஆக வேண்டும். இரண்டாம் பாதியில் நம்பி நாராயணின் குடும்ப வாழ்க்கையை படமாக்கி இருப்பது சிறப்பு. சென்டிமென்டாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டாம் பாதி படத்துடன் ஒன்ற வைத்திருக்கிறது. 

சிர்ஷா ரே-வின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சாம் சிஎஸ்-ன் பிண்ணனி இசை ரசிக்க வைக்கிறது. 

ராக்கெட்ரி நம்பி விளைவு -  உண்மை வெல்லும்


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments