#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

விடுதலை பாகம்-1 - திரை விமர்சனம் :- உண்மைக்கதை! சூரி-விஜய்சேதுபதி-வெற்றிமாறன் கூட்டணி எப்படி இருக்கிறது? (REWIND)

விடுதலை பாகம்-1 - திரை விமர்சனம் :- உண்மைக்கதை! சூரி-விஜய்சேதுபதி-வெற்றிமாறன் கூட்டணி எப்படி இருக்கிறது?

வெளிநாட்டை சேர்ந்த சுரங்க நிறுவனம் ஒன்றிற்கு மலையை அழித்து தொழிற்சாலை அமைக்க அரசு ஒப்புதல் அளிக்கிறது. இதனால் அந்த கிராமத்து மக்கள் அந்த நிறுவனத்தை எதிர்த்து போராட தொடங்குகின்றனர். மக்கள் படை என்கிற தீவிரவாத அமைப்பு ரெயிலுக்கு குண்டு வைத்துத் தகர்க்கிறது.

இதையடுத்து மலைப்பகுதியில் தமிழ்நாடு காவல்துறை முகாம் அமைத்து மக்கள் படையினர் நடமாட்டத்தைக் கண்காணிக்கிறது.

அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் அந்த முகாமிற்குப் பணி நியமனத்தில் வருகிறார் சூரி. இந்த மக்களின் புரட்சியை தடுக்கவும் இதற்கு தலைமை வகிக்கும் மக்கள் போராளியான விஜய் சேதுபதியை பிடிக்கவும் போலீஸ் ‘ஆப்ரேஷன் கோஸ்ட் ஹண்ட்’ என்ற தேடுதல் வேட்டையை தொடங்குகிறது. 

மக்கள் போராளியாக இருக்கும் விஜய் சேதுபதியை பிடிக்க போலீஸ் தீவிரம் காட்ட, அப்பொழுது அந்த மக்களை போலீஸ் சித்ரவதை செய்கிறது. மறுபுறம் கடைநிலை போலீஸ் அதிகாரியாக இருக்கும் சூரி, இந்த மக்களை துன்புறுத்தும் போலீசை எதிர்த்தும், தேடப்படும் நபரை போலீசாக பிடிக்க வேண்டும் என்று ஆர்வத்தையும் காட்டுகிறார். இதனால் உயர் அதிகாரியுடன் சூரிக்கு மோதல் போக்கு ஏற்படுகிறது. மறுபுறம் அந்த கிராமத்தில் வசிக்கும் பவானி ஸ்ரீயுடன் காதலும் ஏற்படுகிறது.

இறுதியில் போலீஸ் விஜய் சேதுபதியை கண்டுபிடித்ததா? மக்களை துன்புறுத்தும் போலீசை விஜய் சேதுபதி எப்படி தடுத்தார்? சூரி தான் நினைத்ததில் வெற்றி பெற்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

அப்பாவி போலீசாக வரும் சூரி படத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அந்த கதாப்பாத்திரத்திற்கு நடிப்பின் மூலம் நியாயப்படுத்தியுள்ளார். ஸ்டண்ட் காட்சிகளில் உயிரைக்கொடுத்து நடித்துள்ளார்.

மக்கள் போராளியாக வரும் விஜய் சேதுபதி, எதார்த்த நடிப்பால் படத்தை தாங்கி பிடிக்கிறார். மக்களின் பிரச்சனைகளை அவரின் உணர்வுகளின் மூலம் வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்.

போலீஸ் அதிகாரியாக வரும் கவுதம் மேனனின் நடிப்பு கவர்கிறது. பவானி ஸ்ரீ தன் நடிப்பால் வசீகரித்துள்ளார். மேலும் ராஜிவ் மேனன், தமிழ், மூணார் ரமேஷ், இளவரசு, சரவண சுப்பையா உள்ளிட்ட பலரும் அவர்களின் வேலையை சரியாக செய்துள்ளனர்.

துணைவன் சிறுகதையை மையமாக வைத்து விடுதலை படத்தை உருவாக்கி மீண்டும் தன்னை நிருபித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். ஒவ்வொரு கதாப்பாத்திரங்களையும் திரைக்கதையின் வடிவத்திற்கு ஏற்ப அழகாக வடிவமைத்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். விறுவிறுப்பான திரைக்கதை, அடுத்த என்ன என்ற தேடல் உள்ளிட்டவைகளை சிறப்பாக கையாண்டு சுவாரசியமான நாவலை திரையில் காணும் உணர்வை ஏற்படுத்தியுள்ளார். செய்தித்தாள்களில் நாம் படித்த செய்திகளை திரையில் காட்சி வடிவத்தில் பார்க்கும்பொழுது பகீரென இருக்கிறது.

வேல்ராஜின் ஒளிப்பதிவு அற்புதம். காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை இயற்கையோடு சேர்த்து அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். இளையாராஜாவின் பின்னணி இசை அற்புதம். பாடல்கள் படம் முடிந்த பிறகும் முணுமுணுக்க வைக்கிறது.

விடுதலை பாகம் 1 - மிரட்சி


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments