#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

அடியே - திரை விமர்சனம்:- ஜி வி பிரகாஷின் இரண்டாம் உலகம்

அடியே - திரை விமர்சனம்:- ஜி வி பிரகாஷின் இரண்டாம் உலகம்

பள்ளியில் படிக்கும்போதே ஒரு விபத்தில் பெற்றோரை இழந்து, நண்பர்களின் உதவியுடன் வாழ்ந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். ஒரு சூழலில் வாழ பிடிக்காமல் தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஜி.வி.பிரகாஷ் மிக பெரிய பின்னணி பாடகியாய் இருக்கும் தனது பள்ளி பருவ காதலி கெளரி கிஷன் ஒரு பேட்டியில் பாடுவதை டிவியில் பார்க்கிறார்.

பேட்டியின்போது பள்ளி பருவத்தில் நடந்த ஒரு நிகழ்வை அவர் சொல்வதால், மீண்டும் வாழ வேண்டும் என்ற ஆசையில் கெளரி கிஷனை சந்திக்க முயற்சிக்கிறார். ஆனால், கௌரிக்கு ஜிவி பிரகாஷை யார் என்று தெரியாது என்கிற நிலையில், தன் காதலை எப்படியாவது அவரிடம் சொல்லிவிட வேண்டும் என்று முயற்சி செய்யும் போது விபத்தில் சிக்கி மயக்கமடைகிறார். கண் விழிக்கும் போது வேறு ஒரு உலகத்தில் இருக்கிறார். அந்த உலகத்தில் காதலி கௌரி கிஷன் மனைவியாக இருக்கிறார். இறுதியில் கௌரி கிஷன் மனைவியாக மாறியது எப்படி? ஜி.வி.பிரகாஷ்க்கு என்ன ஆனது? பழைய உலகத்திற்கு ஜி.வி.பிரகாஷ் வந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் பள்ளி மாணவனாகவும், இளைஞராகவும் உடல் மொழியில் வித்தியாசம் காண்பித்து அசத்தி இருக்கிறார். காதலியை நினைத்து உருகும் போது மனதை கவர்கிறார். நாயகியாக நடித்திருக்கும் கௌரி கிஷன், அழகு பதுமையாக வந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். அதிக காட்சிகளில் இவர்கள் இருவருமே வருவதால், போட்டி போட்டு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வரும் காட்சிகள் அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார் வெங்கட் பிரபு. மிரிச்சி விஜய் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

டைம் டிராவல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் கார்த்திக். இந்த மாதிரி கதைகளில் திரைக்கதையை தெளிவாக அமைப்பது மிகவும் முக்கியம். இதை புரிந்து கொண்டு திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை ரசிக்கும்படி உள்ளது. கோகுல் பினாயின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

அடியே - குழப்பவில்லை


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments