#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

என்னைத் தனியாக சந்திக்கும் படி அழைத்த பிரபலம் ... நடிகை இஷா கோபிகர் வேதனை

என்னைத் தனியாக சந்திக்கும் படி அழைத்த பிரபலம்.. நடிகை இஷா கோபிகர் வேதனை

தமிழில் காதல் கவிதை, என் சுவாச காற்றே, நெஞ்சினிலே, நரசிம்மா, அயலான் படங்களில் நடித்துள்ள இஷா கோபிகர் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சினிமாவில் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாக தெரிவித்து உள்ளார். இது குறித்து இஷா கோபிகர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- "நான் சினிமாவில் அடியெடுத்து வைத்தேன். அப்போது இருந்தே பாலியல் தொல்லையை சந்தித்தேன். ஒரு நடிகர், டிரைவர் இல்லாமல் தனியாக வந்து தன்னை சந்திக்கும்படி அழைத்தார். ஆனால் நான் போகவில்லை. அந்த நடிகர் வேறு யாருமல்ல. இந்தி பட உலகில் அந்த சமயத்தில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர். என்னை நிறைய பேர் ஆபாசமாக தொட்டு இருக்கிறார்கள். நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் ஹீரோக்களோடு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று பலர் ஆலோசனைகளும் வழங்கினர். நான் 1998-ல் ஏக் தா தில் ஏக் தி டாட்கன் படம் மூலம் அறிமுகமானேன். தமிழில் காதல் கவிதை படம் எனக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தது'' என்றார்.  நடிகை இஷா கோபிகரின் பாலியல் குற்றச்சாட்டு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகி உள்ளது.


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments