#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

இரவின் நிழல் - திரை விமர்சனம்:- பார்த்திபனின் புதிய முயற்சி கவனிக்க வைக்கிறதா?

இரவின் நிழல் - திரை விமர்சனம்:- பார்த்திபனின் புதிய முயற்சி கவனிக்க வைக்கிறதா?

சினிமா ஃபைனான்சியராக இருக்கும் நந்து தனது மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவரிடம் திரைப்படம் எடுப்பதற்காக வட்டிக்கு பணம் வாங்கும் இயக்குனர், சில சிக்கல்களால் பணத்தை திருப்பி தரமுடியாத சூழல் ஏற்பட அவர் தற்கோலை செய்து கொள்கிறார். இறந்த இயக்குனரின் தற்கொலைக்கு நந்துதான் காரணம் என நினைத்து நந்துவின் மனைவி குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.

இதனிடையே இவரை கைது செய்ய போலீஸ் துரத்துகிறது. எல்லோரையும் இழந்து வாழ்க்கையில் பல துயரங்களை சந்தித்த சூழலில் பாழடைந்த ஆசிரமம் ஒன்றில் நந்து மறைந்து கொள்கிறார். நந்துவின் வாழ்க்கை எப்படி தொடங்கியது? என்ன என்ன பிரச்சனைகளை எல்லாம் அவர் சந்தித்தார்? என்பதே படத்தின் மீதி கதை.

நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் புது முயற்சியாக அவர் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் பார்த்திபன். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறதோ, அதை தாண்டி இப்படி ஒரே ஷாட்டில் எடுத்திருக்கும் இந்த திரைப்படத்தில் பார்த்திபனின் உழைப்பை நம்மால் உணரமுடிகிறது.

கதை தேர்வும் திரைக்கதையும் விறுவிறுப்பாக அமைந்து படத்தின் மீதுள்ள கவனத்தை சிதற விடாமல் கவனித்துக் கொள்கிறது. சில இடங்களில் தொய்வு இருந்தாலும் படத்தை விட்டு பார்வை விலகி செல்லும் படி இல்லை.

பார்த்திபன் எட்டு வயது சிறுவனாக தோன்றி, இளம் வயது வாலிபனாக நடுத்தர வயது மனிதனாக என்று பல்வேறு காலகட்டத்தில் தோற்றப் பொருத்தத்தோடு கூடிய நடிகர்களை நடிக்க வைத்திருகிறார். அந்தந்த வயதிற்கு ஏற்ப ஒவ்வொரு காலகட்டத்தில் நந்துவாக நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ஜோஸ்வா, பிரவீன்குமார், சந்துரு, ஆனந்த் மற்றும் கிருஷ்ணன் உள்ளிட்டோர் அவர்களின் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். 

கதாநாயகிகளாக நடித்திருக்கும் சினேகா குமாரி, சகாய பிரிகிடா, சாய் பிரியங்கா ருத் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பரமானந்தா சுவாமியாக ரோபோ சங்கரும், அவரது சிஷ்யை பிரேமகுமாரியாக வரலட்சுமியும் நிகழ்காலத்தை கண்முன் காண்பிக்கின்றனர். 

ஒளிப்பதிவு இயக்குனர் ஆர்தர் வில்சன் பெரிய தூணாக இருந்து பார்த்திபனின் கனவை பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் தன் இசையில் காட்சிகளுக்கு தேவையான இசையை நிறைவாக கொடுத்துள்ளார். 

இரவின் நிழல் - புதிய ஒளி


சினி பேச்சு பரிந்துரைக்கும் முந்தைய கட்டுரைகளைப் படிக்க

Post a Comment

0 Comments