பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுனிதாவின் இன்ஸ்டா பதிவு
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ஐந்து வாரங்களைக் கடந்திருக்கிறது.
மொத்தம் 18 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் முதலில் ரவீந்திரன் வெளியேறினார். பிறகு அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறி இருந்தனர். இதனிடையே நான்காவது போட்டியாளராக கடந்த வாரம் சுனிதா வெளியேறி இருந்தார். அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பலரும் சுனிதாவிற்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பகிர்ந்து இருந்தனர். இந்த நிலையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சுனிதா, தான் வெளியேறியதற்குப் பிறகு முதல் முறையாகத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில், "நான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 35 நாட்கள் இருந்ததற்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி.
எண்ணற்ற நினைவுகளை இந்த நிகழ்ச்சி எனக்குக் கொடுத்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட பாடத்தை என்னுடைய வாழ்க்கைக்குப் பயன்படுத்துவேன்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டு, தன்னுடைய பிக் பாஸ் பயண வீடியோவையும் பகிர்ந்து இருக்கிறார்.
0 Comments